×

பக்கெட் நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

பெரம்பூர்: வில்லிவாக்கம் ஜெகநாதன் நகர் 9வது தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (33). இவரது மனைவி மேரி. தம்பதியின் 10 மாத குழந்தை ரிஷிகா. நேற்று முன்தினம் ரவிக்குமார் வெளியே சென்ற நிலையில், மேரி மற்றும் குழந்தைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் மேரி எழுந்து பார்த்தபோது, குழந்தை ரிஷிகாவை காணவில்லை. வீட்டில் தேடியபோது, பாத்ரூமில் இருந்த பக்கெட் நீரில் தவறி விழுந்தது தெரிந்தது. உடனே, குழந்தையை மீட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாடி ஸ்ரீநிவாசா நகர், காமராஜர் 2வது தெருவை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பொன்மணி. இவர்களது ஒன்றரை வயது குழந்தை சர்வேஷ், நேற்று வீட்டில் இருந்த பக்கெட் நீரில் தவறி விழுந்து மூழ்கியது. உடனடியாக குழந்தையை மீட்டு பாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

The post பக்கெட் நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலி appeared first on Dinakaran.

Tags : Perambur ,Ravikumar ,9th Street, Villivakkam Jaganathan Nagar ,Mary ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...